ஆர்.கே.நகரில் நாடார், அதிமுக வாக்குகளை பிரிக்கும் விஷாலின் அப்பட்டமான ப்ளான் பல் இளிக்கிறதே!

259
ஆர்.கே.நகரில் நாடார், அதிமுக வாக்குகளை பிரிக்கும் விஷாலின் அப்பட்டமான ப்ளான் பல் இளிக்கிறதே!
ஆர்.கே.நகரில் நாடார், அதிமுக வாக்குகளை பிரிக்கும் விஷாலின் அப்பட்டமான ப்ளான் பல் இளிக்கிறதே!

ஆர்.கே.நகரில் நாடார், அதிமுக வாக்குகளை பிரிக்கும் விஷாலின் அப்பட்டமான ப்ளான் பல் இளிக்கிறதே!

ஆர்.கே.நகரில் நாடார், அதிமுக வாக்குகளை பிரிக்கும் விஷாலின் அப்பட்டமான ப்ளான் பல் இளிக்கிறதே!- வீடியோ சென்னை: காமராஜர் சிலைக்கு மாலை, எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களில் மரியாதை என ஆர்.கே.நகரில் போட்டியிடும் விஷால் அலப்பறையை கூட்டும் போதே நாடார் மற்றும் அதிமுக வாக்களை பிரிக்கத்தான் இந்த கூத்து என்பது அரசியலைத் தெரிந்த சிறுபிள்ளைக்கும் கூட புரியாமல் இல்லை. ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் களத்தில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் நடிகர் விஷால், இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கு முன்பு இரண்டு முக்கியமான இடங்களுக்குப் போயிருந்தார். அது சில கேள்விகளை எழுப்பும் வகையில் உள்ளது.

ஆர்.கே.நகரின் பலமான வாக்கு வங்கியில் ஓட்டையைப் போடும் வகையிலான அவரது மூவ் ஆக இது பார்க்கப்படுகிறது. அவரது இலக்கு யார் என்பதையும் ஒரு வகையில் ஊகிக்கவும் இது வகை செய்துள்ளது. அதிமுக வாக்குகளைப் பிரிக்க வேண்டும் என்பதே விஷாலின் நோக்கமாக இருக்கக் கூடும் என்று தெரிகிறது. அதேசமயம், ஆர்.கே.நகரில் பெருவாரியாக உள்ள நாடார் சமுதாய வாக்குகளையும் அவர் பறிக்க முயல்கிறார்.

திடீர் அரசியல்வாதி திடீர் இட்லி திடீர் தோசை போல திடீர் வேட்பாளர் ஆகியுள்ளார் விஷால். சுயேச்சை வேட்பாளராக ஆர்.கே.நகரில் இறங்கியுள்ளார். அவராக இறங்கியிருக்கிறாரா அல்லது யாரேனும் இறக்கி விட்டுள்ளனரா என்று தெரியவில்லை.

மனுத் தாக்கல் தனது ரசிகர் மன்றத்தினருடன் திடீரென வடசென்னையில் ஆலோசனை நடத்திய விஷால் இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்கிறார். அதற்கு முன்பாக சில இடங்களுக்கு அவர் விசிட் அடித்தார்.

வாக்கு வங்கிகளைக் குறி வைத்து அவர் காலையில் போன இடங்கள் தி.நகர் காமராஜர் சிலை மற்றும் ராமாவரத்தில் உள்ள எம்ஜிஆர் வீடு. இரண்டுமே முக்கியமானது. காரணம், ஆர்.கே.நகர் அதிமுக கோட்டை. அங்கு நாடார் சமுதாய வாக்குகளும் கணிசமாக உள்ளது. எனவே இதை மனதில் வைத்தே விஷால் இந்த இடங்களுக்குப் போனதாக தெரிகிறது.

ஓட்டு பிரிக்கிறாராம் அத்துடன் எம்ஜிஆர், ஜெயலலிதா சமாதிக்கு நானும் போறேன்.. நானும் போறேன் என கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கிறார் விஷால்.. சமாதி அரசியலால் தமிழக மக்கள் செம கடுப்பில் இருக்கிறார்கள். இதை எல்லாம் புரிந்து கொள்ளக் கூடியவராக விஷால் இல்லைதான். அதிமுக வாக்குகளையும் நாடார் வாக்குகளையும் பிரிக்கிற ஜிக்ஜாக் வேலைக்காகத்தான் களமிறக்கப்பட்டிருக்கிறார் விஷால். அந்த கேலிக்கூத்தை கனசித்தமாக ஸ்கிரிப் படி செய்து வருகிறார் விஷால் என்பது எல்லோருக்குமே தெரிந்து போன உண்மை. இதை உணரக்கூடிய பக்குவமாவது அரசியல் அரைவேக்காடு விஷாலுக்கு இருக்கிறதா? என்பதுதான் தெரியவில்லை.

Check our All Movie/ Actors comedians Meme Templates from here Please Support us by like/Follow our pages: Facebook | Twitter | Instagram

Write your Comments