இதனைத் தொடர்ந்து சாப்பிட்டால் இதய நோய் உங்களுக்கு வரவே வராது!

399
இதனைத் தொடர்ந்து சாப்பிட்டால் இதய நோய் உங்களுக்கு வரவே வராது!

இதனைத் தொடர்ந்து சாப்பிட்டால் இதய நோய் உங்களுக்கு வரவே வராது!

ஆயுர்வேதத்தின் முக்கிய மருந்துகளாக இருப்பது தேன் மற்றும் இலவங்கப்பட்டை தான். இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கின்றன, அவை நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. அதுமட்டுமின்றி நம் மனதையும் அமைதிப்படுத்த இது பயன்படும்.

தேனில் குளுக்கோஸ், ஃப்ருக்டோஸ் மற்றும் மினரல்ஸ் இருக்கிறது. அத்துடன் இரும்புச்சத்து,கால்சியம்,போஸ்பேட்,க்ளோரின்,பொட்டாசியம்,மக்னீசியம்,விட்டமின், பி1,பி2,பி3 ,பி5 மற்றும் பி6 இருக்கிறது. இது மிகச்சிறந்த ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் ஆகும்.

 தயாரிப்பு முறை :

தயாரிப்பு முறை :

ஒரு டம்பளர் வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் பட்டைத்துளை சேர்த்து நன்றாக கலக்குங்கள். பின்னர் அதில் ஒரு ஸ்பூன் தேனும் சேர்த்து குடிக்க வேண்டும். இதனை தண்ணீரில் சேர்க்கலாம் அப்டியே பேஸ்ட் செய்து சாப்பிடலாம்

இருதய நோய்:

இருதய நோய்:

தேன் மற்றும் இலவங்கப் பட்டை பொடி இரண்டையும் கலந்து பிரெட்டின் மேல் ஜாம்முக்கு பதில் தடவி உண்பதால் கொலஸ்ட்ரால் குறையும். இருதயத்தில் இருக்கும் தமனிகளில் இருக்கும் கொலஸ்ட்ராலைக் குறைக்கும். ஏற்கனவே மாரடைப்பு நோய் வந்தவர்களும் இதை சாப்பிடுவதால் மறுபடி மாரடைப்பு ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

வயது ஏற ஏற நம் இருதயத்தின் தசைகள் வலுவிழந்து போகின்றன. தேனும் இலவங்கப் பட்டையும் இருதய தசைகளை வலுப் பெறச்செய்கின்றன.

மூட்டு வலி :

மூட்டு வலி :

மூட்டு நோய் உள்ளவர்கள் காலை, மாலை இருவேளைகளிலும் ஒரு டம்ளர் சூடான தண்ணீரில் இரண்டு டீஸ்பூன் தேனும் ஒரு சிறிய ஸ்பூன் இலவங்கப் பட்டைப் பொடியும் கலந்து சாப்பிடலாம். தொடர்ந்து சாப்பிட மூட்டு நோய் குணமாகும்.

கொலஸ்ட்ரால்:

கொலஸ்ட்ரால்:

ஒரு கப் தண்ணீருடன் 2 ஸ்பூன் தேனும், 3 டீஸ்பூன் இலவங்கப் பட்டை பொடியும் சேர்த்து சாப்பிட கொலஸ்ட்ரால் அளவு குறைந்திடும். தொடர்ந்து சாப்பிட நல்ல பலன் தெரியும். சுத்தமான தேன் தினமும் உணவுடன் சாப்பிட கொலஸ்ட்ரால் மூலம் வரும் தொந்தரவுகள் குறையும்.

ஜலதோஷம்:

ஜலதோஷம்:

ஒரு மேசைக் கரண்டி தேனை சுடு நீரில் வைத்து சிறிது வெதுவெதுப்பாக்கி அதனுடன் இலவங்கப் பட்டை பொடியை சேர்த்து மூன்று நாளைக்கு சாப்பிட கடுமையான ஜலதோஷம், இருமல், சைனஸ் தொல்லைகள் மறையும்.வயிற்று வலி, வயிற்றுப் புண்ணுக்கு தேனும் இலவங்க பட்டை பொடியும் மிகச் சிறந்த மருந்து.

நோய் எதிர்ப்பு சக்தி:

நோய் எதிர்ப்பு சக்தி:

தினசரி தேனையும் இலவங்கப் பட்டைப் பொடியையும் சாப்பிடுவது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மேலும் நம் உடலை வைரஸ் தாக்குதலில் இருந்தும் காக்கும்.

அஜீரணக் கோளாறு:

அஜீரணக் கோளாறு:

இரண்டு ஸ்பூன் தேனை எடுத்து பட்டைத்தூளுடன் சேர்த்து சாப்பிட்டு வர அஜீரணக்கோளாறு சரியாகும். அசிடிட்டி இருப்பவர்களும் இதனைச் சாப்பிடலாம். ஜீரணிக்க கடினமாக இருக்கும் உணவினை சாப்பிட்டவுடன் பட்டைத்தூளை தேனுடன் சாப்பிடுவது ஜீரணத்தை தூண்டி கடினமான உணவை ஜீரணிக்க உதவும்.

சுருக்கங்கள் :

சுருக்கங்கள் :

ஒரு ஸ்பூன் இலவங்கப் பட்டை பொடியை ஒரு கப் நீரில் போட்டு கொதிக்க விடவும். அதனுடன் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து குடிக்க வேண்டும். இது சருமத்தை இளமையாகவும் மென்மையாகவும் வைப்பதுடன், முகத்தில் சுருக்கங்கள் வருவதை தடுக்கிறது.

பரு :

பரு :

3 ஸ்பூன் தேனுடன் ஒரு டீஸ்பூன் இலவங்கப்பட்டை பொடியை குழைத்து பேஸ்ட் செய்யவும். பேஸ்ட்டை முகப் பருக்களின் மேல் பூசி, பதினைந்து நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரினால் முகத்தை கழுவிடலாம். இதனை தினமும் செய்து வந்தால் பருக்கள் மறைந்திடும். தழும்பும் மறைந்திடும்.

எடை குறைவு :

எடை குறைவு :

ஒரு கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் தேன் மற்றும் இலவங்கப் பட்டைப் பொடியைப் போட்டு காலை உணவிற்கு முன் குடிக்க வேண்டும்.இதனை தொடர்ந்து குடித்து வந்தால் உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பு கரைவதுடன், மேலும் கொழுப்பு சேராமலும் இருக்கும்.

அசதி :

அசதி :

தேனில் இயற்கையாய் இருக்கும் இனிப்பு, நம் உடலுக்கு பலத்தைக் கொடுக்கிறது. இந்த இனிப்பு நம் உடலுக்குத் தீங்கிழைப்பதில்லை. வயதானவர்கள் தேன், இலவங்கப் பட்டை பொடி இரண்டையும் சம அளவில் எடுத்து தினமும் சாப்பிடுவதால், உடலாலும் மனதாலும் மிகவும் சுறு சுறுப்பாக இருப்பார்கள்.

முடி உதிர்வு :

முடி உதிர்வு :

முடி உதிர்வு மற்றும் வழுக்கை தலையுள்ளவர்கள் சிறிதளவு ஆலிவ் ஆயில், ஒரு டேபிள் ஸ்பூன் தேன், ஒரு டீஸ்பூன் பட்டை பவுடர் மூன்றையும் கலந்து பேஸ்ட்டாக கலந்து, குளிப்பதற்கு, 15 நிமிடத்திற்கு முன்பு தேய்த்து அதன் பிறகு வெது வெதுப்பான நீரில் தலையை கழுவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

சர்க்கரை நோய் :

சர்க்கரை நோய் :

தேன் மற்றும் பட்டை சர்க்கரை நோய்களுக்கு மிகவும் நல்லது. பட்டையில் இருக்ககூடிய தாதுக்கள் இன்ஸுலின் சுரப்பை துரிதப்படுத்தும்.இதனால் உடலில் குளுக்கோஸ் அளவு சீராக வைத்திருக்க உதவிடும்.

Check our All Movie/ Actors comedians Meme Templates from here Please Support us by like/Follow our pages: Facebook | Twitter | Instagram

Write your Comments