ஏன் காதில் உள்ள அழுக்கை சுத்தம் செய்ய கூடாது என உங்களுக்கு தெரியுமா?

404
ஏன் காதில் உள்ள அழுக்கை சுத்தம் செய்ய கூடாது என உங்களுக்கு தெரியுமா?
ஏன் காதில் உள்ள அழுக்கை சுத்தம் செய்ய கூடாது என உங்களுக்கு தெரியுமா?

ஏன் காதில் உள்ள அழுக்கை சுத்தம் செய்ய கூடாது என உங்களுக்கு தெரியுமா?

காதில் சேரும் மெழுகு போன்ற அழுக்கை வாரம் ஒருமுறையாவது குளித்து முடித்து வந்தவுடன் சுத்தம் செய்துவிடுவோம். சுத்தம் செய்தவுடன் அந்த பட்ஸ்-ஐ தூர வீசிவிட்டு தான் அடுத்த வேலையே பார்ப்போம். சிலருக்கு காதை சுத்தம் செய்த பிறகு ஏதோ புதிய ஹெட்செட் மாறியது போல, சப்தங்கள் நன்கு கேட்பது போன்று உணர்வார்கள். ஆனால், ஆராய்ச்சியாளர்களோ தயவு செய்து காதில் உண்டாகும் அந்த மெழுகு போன்ற அழுக்கை நீக்க வேண்டாம். அதுதான் காதின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது என கூறுகின்றனர். ஆம், இதுதான் உண்மை, காதில் உள்ள அழுக்கை நீக்குவது தவறு. என்றாவது நீங்கள் யோசித்து உண்டா? அது ஏன் காதில் உண்டாகும் அழுக்கு மட்டும் மெழுகு போன்று இருக்கிறது என.

கொழுப்பு அமிலங்களும், கொலஸ்ட்ராலும்! நமது காதில் அழுக்கு போன்று உண்டாகும் அந்த மெழுகு போன்ற பொருள் கொழுப்பு அமிலங்கள் மற்றும் கொலஸ்ட்ராலால் உருவாகிறது. அந்தந்த உயிரினம், வயது, உணவுமுறை சார்ந்த காதில் உருவாகும் இந்த மெழுகு போன்ற பொருள் வேறுபடுகிறது. வேறு தாக்கம் பெறுகிறது.

காதின் பாதுகாவலன்! உண்மையில் நாம் அழுக்கு என எண்ணி வாராவாரம் சுத்தம் செய்து அகற்றும் இந்த மெழுகு போன்ற பொருள் தான் நமது காதினை காக்கும் பாதுகாவலன் ஆகும்.

தடுப்பான்! காதிலும் இறந்த செல்கள், பாக்டீரியாக்கள் போன்றவை இருக்கும். மேலும் நாம் அதிக சப்தம் கொண்டு பாடல்கள் கேட்பது காதை வலுவாக பாதிக்கும். அதிக சப்தம் மற்றும் பாக்டீரியா போன்றவற்றிடம் இருந்து காதை காக்கும் தடுப்பானாக இந்த மெழுகு போன்ற பொருள் உதவுகிறது.

பட்ஸ் பயன்படுத்துவது தான் தவறு! நாம் பட்ஸ் பயன்படுத்தி காதுகளை சுத்தம் செய்வது தான் உண்மையில் தவறு. பட்ஸ் அல்லது குச்சி போன்றவற்றை பயன்படுத்தி காதினை சுத்தம் செய்ய முனைவதால், அந்த மெழுகு போன்ற பொருள் காதின் உட்புறத்தில் கெட்டியாக சேர / படர ஆரம்பித்துவிடும். இது தான் தவறான அணுகுமுறை. எனவே, இதை முதலில் நாம் நிறுத்த வேண்டும்.

எக்காரணம் கொண்டும் அகற்ற வேண்டாம்! சில ஆராய்ச்சி முடிவுகளில், காதில் உருவாகும் இந்த மெழுகு போன்ற பொருளை எக்காரணம் கொன்றும் அகற்ற வேண்டாம் என்றும். இந்த மெழுகு போன்ற பொருள் அதிகரிக்கும் போது, காதின் மேல் / வெளிப்புறங்களிலும் தோன்றும். அப்போது மட்டும் காதின் வெளிப்புறத்தை பஞ்சு / துணி / தண்ணீர் பயன்படுத்து துடைத்துக் கொள்ளுங்கள் என கூறப்பட்டுள்ளது.

இது அழுக்கு அல்ல! தொப்புள், கண்களின் ஓரத்தில், இதர உடல் பாகங்களின் இடுக்கு பகுதிகளில் உண்டாவது போன்ற வியர்வை மற்றும் அழுக்கு கலந்த பொருள் அல்ல இது. இது காதினை பாதுகாக்கும் பொருளாக தான் நாம் காண வேண்டும். எனவே, இந்த வேறுபாட்டை முதலில் நாம் அறிந்துக் கொள்ள வேண்டும்.

குறிப்பு! முக்கியமாக நமது வீட்டில் பாட்டி மற்றும் அம்மாக்கள் கறிவேப்பிலை குச்சி போன்றவற்றை எல்லாம் பயன்படுத்தி காது குடைவார்கள். இதை முதலில் நிறுத்த கூற வேண்டும். இதனால், காதின் உட்பகுதியில் இருக்கும் மென்மையான ஜவ்வு பகுதி பாதிக்கப்படும்.

Check our All Movie/ Actors comedians Meme Templates from here Please Support us by like/Follow our pages: Facebook | Twitter | Instagram

Write your Comments