சேர்ந்து தற்கொலை செய்யலாம் என்று கூறிவிட்டு காதலிக்கு மட்டும் தீ வைத்த இளைஞன்.. கோவையில் கொடூரம்

536
சேர்ந்து தற்கொலை செய்யலாம் என்று கூறிவிட்டு காதலிக்கு மட்டும் தீ வைத்த இளைஞன்.. கோவையில் கொடூரம்
சேர்ந்து தற்கொலை செய்யலாம் என்று கூறிவிட்டு காதலிக்கு மட்டும் தீ வைத்த இளைஞன்.. கோவையில் கொடூரம்

சேர்ந்து தற்கொலை செய்யலாம் என்று கூறிவிட்டு காதலிக்கு மட்டும் தீ வைத்த இளைஞன்.. கோவையில் கொடூரம்

கோவையை சேர்ந்த செல்வகுமார் என்ற நபர் தன் காதலி ஜான்சிபிரியா என்ற பெண்ணுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொள்ள திட்டமிட்டு இருக்கிறார். காதலில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவர்கள் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. கடைசி நேரத்தில் மனம் மாறிய செல்வகுமார் அந்த பெண்ணுக்கு மட்டும் தீ வைத்துவிட்டு ஓடியிருக்கிறார். அந்த இடத்திலேயே துடிக்கதுடிக்க அந்த பெண் மரணம் அடைந்து இருக்கிறார். இந்த நிலையில் போலீஸ் விசாரணையில் அவர் நிறைய புதிய தகவல்களையும், திடுக்கிடும் உண்மைகளையும் பகிர்ந்து இருக்கிறார். காதலியை உயிரோடு காதலன் எரித்து கொன்ற சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

4வருடமாக தொடர்ந்த காதல் கோவையின் நெகமம் அருகே பிளஸ்-2 படித்து வந்து இருக்கிறார் ஜான்சிபிரியா. இவர் அதே பகுதியை சேர்ந்த செல்வகுமார் என்ற 22 வயது நிரம்பிய விசைத்தறி தொழிலாளியை காதலித்து வந்து இருக்கிறார். ஜான்சிபிரியா 8 வது படிக்கும் காலத்தில் இருந்தே செல்வகுமாரை காதலித்து இருக்கிறார். இவர்கள் இருவரும் வேறுவேறு ஜாதி என்பதால் ஊரில் உள்ள பெரியவர்கள் இவர்களை அடிக்கடி கண்டித்துள்ளனர்.

வேறு கல்யாணத்திற்கு திட்டம் ஜான்சி பிரியாவின் காதல் விஷயம் சில நாட்களுக்கு முன் அவரது வீட்டிற்கு தெரிந்து இருக்கிறது. அதையடுத்து அவரை அவரது பாட்டி கமலா மோசமாக திட்டி கண்டித்து இருக்கிறார். மேலும் சீக்கிரத்திலேயே வேறு ஒரு நபருக்கு திருமணம் செய்து வைக்கவும் முடிவு செய்து இருக்கின்றனர். வீட்டில் நடக்கும் இந்த பிரச்சனைகளை ஜான்சிபிரியா செல்வகுமாரிடம் கூறி வருத்தப்பட்டுள்ளார்.

தற்கொலை திட்டம் ஜான்சிபிரியாவின் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் நேற்று திடீர் நேற்று செல்வகுமார் அங்கு வந்து இருக்கிறார். கையில் கயிறை வைத்து தூக்கு மாட்டிக் கொள்ள அழைத்து இருக்கிறார். ஆனால் தூக்கு மாட்டிக்க பயந்த இருவரும் உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்துக் கொள்ள முடிவு செய்து இருக்கின்றனர். முதலில் ஜான்சிபிரியாவுக்கு தீ வைத்துவிட்டு செல்வகுமார் வந்து கட்டிப்பிடித்துக் கொள்வதாக கூறியிருக்கிறார். ஆனால் ஜான்சிபிரியாவுக்கு தீ வைத்த அவர் அங்கிருந்து உடனடியாக வெளியே ஓடி இருக்கிறார்.

போலீசார் விசாரணை ஜான்சிபிரியா அந்த இடத்திலேயே துடிக்கதுடிக்க மரணம் அடைந்து இருக்கிறார். தற்போது செல்வகுமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் தற்கொலை செய்யும் திட்டத்திலேயே வரவில்லை, கொலை செய்யும் முடிவுடன்தான் அங்கு வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அந்த பெண்ணை கொலை செய்துவிட்டு அவர் 5 மணி அங்கு இருந்த காட்டுப்பகுதியில் தலைமறைவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Check our All Movie/ Actors comedians Meme Templates from here Please Support us by like/Follow our pages: Facebook | Twitter | Instagram

Write your Comments