தேசியகீதம் முதன்முதலில் பாடப்பட்ட இடம் எது தெரியுமா?

120
தேசியகீதம் முதன்முதலில் பாடப்பட்ட இடம் எது தெரியுமா?
தேசியகீதம் முதன்முதலில் பாடப்பட்ட இடம் எது தெரியுமா?

தேசியகீதம் முதன்முதலில் பாடப்பட்ட இடம் எது தெரியுமா?

1926ம் ஆண்டு கோவைக்கு வந்த வடமாநில கவிஞர் ஒருவர் தான் எழுதிய பாடலை கோயம்புத்தூர் சர்வஜனா பள்ளியில் தான் முதல்முதலாகப் பாடினார். பின்னாளில் அந்த பாடல்தான் தேசியகீதமாக அறிவிக்கப்பட்டது. அதுதான் ஜன கன மன. அந்த கவிஞர்தான் ரவீந்திரநாத் தாகூர். 12 நிமிடங்களில் 10000 ஆண்டுகள் வரை பின்னே செல்லவேண்டுமா?

இங்கே வாங்க ஒரு சில ஊர்களில் விவசாயம் செழிப்பாக இருக்கும், சில ஊர்களில் ஒரு குறிப்பிட்ட தொழில் அதிகமாக நடைபெறும், சில ஊர்களில் சுற்றிப்பார்க்க நிறைய இடங்கள் இருக்கும், சில இடங்களிலோ கல்வி, சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள் சிறப்பானதாக இருக்கும். ஆனால் இவை அனைத்தும் ஒரே நகரத்தில் இருக்கிறதென்றால் அது கொங்கு நாட்டின் தலைநகரான கோயம்பத்தூர் தான். வாழ்ந்தா இந்த மாதிரி இடத்துலதா வாழணும் ..ப்பா என்ன பிரம்மாண்டம்! அப்படிபட்ட பெருமைகள் நிறைந்த கோயம்புத்தூரில் இருக்கும் அதிசயங்கள் தெரியுமா?

வெள்ளியங்கிரி மலை: தென் கயிலாயம் என்று போற்றப்படும் சிறப்பினை பெற்ற இடம் கோவை மாவட்டத்தில் மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கும் வெள்ளியங்கிரி மலை ஆகும். மனதை கொள்ளைகொள்ளும் 50 அரண்மனைகள்!!! சித்திரை மாதம் ஏழு மலை தாண்டி வெள்ளியங்கிரியானை வழிபட ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். வெள்ளியங்கிரி மலை: வெள்ளியங்கிரியில் ஏழாவது மலையின் மேல் உள்ள ஒரு குகையினுள் சுயம்பு லிங்கமாக சிவ பெருமான் வெள்ளியங்கிரியானாக எழுந்தருளியிருக்கிறார். எல்லா நாளும் மழைக்காலம் இந்த ஊருக்கு மட்டும் அப்படி என்ன வரம் இந்த ஏழு மலைகளை கடப்பது மிகவும் சவால் நிறைந்த காரியமாகும். அடர்ந்த வனப்பகுதியில் செங்குத்தான பாதையில் பயணிக்க வேண்டியிருக்கும் என்பதால் குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் இந்த மலை பயணத்தை தவிர்ப்பது நல்லது. வெள்ளியங்கிரி மலை: ரத்தினகிரி, தக்ஷின கைலாசம், பூலோக கயிலாயம் என்றெல்லாம் அழைக்கப்படும் இந்த மலையில் தான் தனது உமையாள் பார்வதி தேவியின் கோரிக்கைக்கு இணங்க பிரணவ தாண்டவத்தை சிவபெருமான் ஆடியதாக கூறப்படுகிறது. வயநாடுனா சுற்றுலா – சுற்றுலா என்றால் இதுதான்!!! அடிபொலி…. இமய மலையில் இருக்கும் கயிலாய மலைக்கு செல்ல முடியாதவர்கள் அம்மலைக்கு சென்ற புண்ணியத்தை பெற வெள்ளியங்கிரிக்கு வரலாம் என சொல்லப்படுகிறது. வெள்ளியங்கிரி வருடாவருடம் பங்குனி மற்றும் சித்திரை மாதங்களில் வெள்ளியங்கிரி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. பக்தர்கள் இந்த இரண்டு மாதங்களில் மட்டுமே இந்த மலைப்பயணம் மேற்கொள்ள வேண்டும். 500 கோடி பேரை பார்த்த ரயில் நிலையங்கள் நாமளும் போலாம்! மற்ற நாட்களில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் மலைப்பயணம் மிகவும் ஆபத்தானது ஆகும். வெள்ளியங்கிரி வெள்ளியங்கிரி பயணம் உடலுக்கும் மனதுக்கும் மிகுந்த உற்சாகத்தை அளிக்கும். இந்த மலைப்பாதையில் கிடைக்கும் சுனை நீருக்கு இணையான சுவையுடைய நீரை இந்த உலகத்திலேயே நாம் பார்க்க முடியாது எனலாம். அதேபோல அதிகாலை சூரிய உதயத்தின் போது வானில் நடக்கும் வர்ணஜாலத்தையும் காணத்தவறாதீர்கள். கோவை குற்றாலம்: கோயம்பத்தூரில் இருக்கும் ஒரு அற்புதமான இயற்கை சுற்றுலாத்தலம் என்றால் அது கோவை குற்றாலம் தான். பெயரிலேயே புரிந்திருக்கும் இது அருவி தான் என்று. மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் சிறுவாணி ஆற்றின் குறுக்கே கோவை குற்றாலம் அமைந்திருக்கிறது. வெள்ளியங்கிரி மலைக்கு வெகு அருகிலேயே கோவை குற்றாலம் அமைந்திருக்கிறது. பிளாக் தண்டர்: தமிழ்நாட்டில் இருக்கும் மிகச்சிறந்த ‘தீம் பார்க்’ எனப்படும் கேளிக்கை பூங்காக்களில் ஒன்று தான் கோயம்பத்தூரில் மேட்டுப்பாளையம் ஊட்டி சாலையில் அமைந்திருக்கும் ‘பிளாக் தண்டர்’ ஆகும். நீர் விளையாட்டுகள் எக்கச்சக்கமாக இங்கே இருக்கின்றன. ஊட்டி மலையின் அடிவாரத்தில் அற்புதமான சூழலில் இந்த கேளிக்கை பூங்கா அமைந்திருக்கிறது. நண்பர்களுடனோ அல்லது குடும்பத்தினருடனோ வார இறுதி விடுமுறையை செலவிட அற்புதமான இடமாகும் இது. மருதமலை: ஆறு படைவீடுகளுக்கு அடுத்தபடியாக பிரபலமான முருகன் கோயில் கோவையில் இருக்கும் மருதமலை முருகன் கோயில் தான். கோவையில் இருந்து 12கி.மீ தொலைவில் இருக்கும் இக்கோயிலில் முருகன் சந்நிதி மட்டுமில்லாது தான் தோன்றி விநாயகர் கோயில், பாம்பாட்டி சித்தர் கோயில் போன்றவையும் இருக்கின்றன. பரூக் பீல்ட்ஸ்: கோயம்பத்தூரின் முதல் ஷாப்பிங் மால் என்ற பெருமைக்கு சொந்தமான இடம் பரூக் பான்ட் ரோட்டில் அமைந்திருக்கும்பரூக் பீல்ட்ஸ் மால் ஆகும். 2009ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த வளாகத்தினுள்ளே ஏராளமான பன்னாட்டு துணிக்கடைகள் மற்றும் உணவகங்கள் செயல்படுகின்றன. புத்தகக்கடையும், விளையாட்டு அரங்கமும் கூட உண்டு. பன் ரிபப்ளிக்: பரூக் பீல்ட் போன்றே கோவையில் இருக்கும் மற்றுமொரு வணிக வளாகம் தான் அவினாசி சாலையில் அமைந்திருக்கும் பன் ரிபப்ளிக் ஆகும். பரூக் பீல்டை விட அளவில் சிறியதான இந்த வளாகத்தில் இருக்கும் திரையரங்கங்கள் மிகவும் பிரபலமானவை ஆகும். குழந்தைகளை கவரும் விளையாட்டுகள் இங்கே நிறைய உண்டு. ஈஷா யோகா: வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் வழியில் அமைந்திருக்கும் ஆன்மீக மையமான ஈஷா யோகா கோவையில் தவற விடகூடாத ஓரிடமாகும். சத்குரு ஜக்கி வாசுதேவ் என்பவரால் நடத்தப்படும் இந்த தியான மையத்தின் மூலவராக பாதரசத்தினால் செய்யப்பட்ட மிகப்பெரிய லிங்கம் ஒன்று உள்ளது. அதோடு தீர்த்தலிங்கம், லிங்க பைரவி ஆகிய சந்நிதிகளும் இங்கே இருக்கின்றன. ஈஷா யோகா: சர்வ மதத்தினருக்கும் உரியதான இந்த மையத்திற்கு சென்று தியானம் செய்வது மிகவும் புதுமையான ஆன்மீக அனுபவமாக இருக்கும். வெள்ளியங்கிரி மலை மற்றும் கோவை குற்றாலம் ஆகிய இடங்களுக்கு வெகு அருகிலேயே தான் ஈஷா யோகா மையமும் அமைந்திருக்கிறது. ஒப்பனக்கார வீதி: கோவை டவுன் ஹால் பகுதியில் இருக்கும்ஒப்பனக்கார வீதியில் கிடைக்காத பொருட்களே இல்லை எனலாம். போத்தீஸ், சென்னை சில்க்ஸ் போன்ற துணிக்கடைகள், வீட்டு உபயோக பொருட்கள், மின்னணு சாதனங்கள் என அனைத்தையும் குறைந்த விலைக்கு வாங்க சிறந்த இடமாகும் இது. கோவைக்கு வாருங்கள்: ஒருமுறை கோவைக்கு வந்து சில காலம் வாழ்ந்துவிட்டால் திரும்பிப்போக மனதே வராது என்று சொல்லப்படுவதுண்டு. சில நாட்கள் கோவைக்கு வந்து இங்கே குறிப்பிடப்பட்டுள்ள இடங்களுக்கு ஒரு சுற்றுலா சென்று வாருங்கள். இனிமேல் கோயம்பத்தூரில் சுற்றிப்பார்க்க இடங்கள் அவ்வளவாக இல்லை என்று யாரேனும் சொன்னால் நம்பாதீர்கள்.

Check our All Movie/ Actors comedians Meme Templates from here Please Support us by like/Follow our pages: Facebook | Twitter | Instagram

 

Write your Comments