தே… பய…. சர்ச்சை டயலாக்குடன் வெளியானது பாலாவின் நாச்சியார் டீசர்!

1208
தே... பய.... சர்ச்சை டயலாக்குடன் வெளியானது பாலாவின் நாச்சியார் டீசர்!
தே... பய.... சர்ச்சை டயலாக்குடன் வெளியானது பாலாவின் நாச்சியார் டீசர்!

தே… பய…. சர்ச்சை டயலாக்குடன் வெளியானது பாலாவின் நாச்சியார் டீசர்!

பாலா – ஜோதிகா கூட்டணியில் உருவாகியுள்ள நாச்சியார் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. சர்ச்சையைக் கிளப்பும் வகையில் தே… பய என்ற வார்த்தைகளை ஜோதிகா உச்சரிப்பது போல இந்த டீசரைக் கட் பண்ணியுள்ளனர்.

பாலாவின் தயாரிப்பு இயக்கத்தில், ஜோதிகா, ஜிவி பிரகாஷ் நடித்துள்ள படம் நாச்சியார். இதன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றன.

படத்தின் டீசர் இன்று மாலை வெளியானது. நடிகர் சூர்யா இதனை யுட்யூபில் வெளியிட்டார். இதில் போலீஸ் அதிகாரியாகத் தோன்றுகிறார் ஜோதிகா. அதிரடி சண்டைக் காட்சிகளிலும் அவர் நடித்துள்ளார்.

இந்த நிலையில் படத்தின் டீசர் இன்று யுட்யூபில் வெளியானது. கிட்டத்தட்ட 1 நிமிடம் ஓடும் இந்த டீசர் ஒரு ஆக்ஷன் படம் என்பதைக் காட்டும் வகையில் உள்ளது. டீசரின் இறுதியில் ஜோதிகா ஒரு இளைஞனை அறைந்துவிட்டு ‘தே… பய’ என்று கோபத்துடன் திட்டுகிறார்.

பாலாவின் இந்த ட்ரைலர் வெளியான கையோடு பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

Check our All Movie/ Actors comedians Meme Templates from here Please Support us by like/Follow our pages: Facebook | Twitter | Instagram

Write your Comments