பிப்ரவரி 24 முதல் அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும் என அறிவிப்பு!

29
தமிழக அரசின் 'இருசக்கர வாகன திட்டம்': விண்ணப்பிக்க தகுதியுள்ள பெண்கள் யார்?- முழு விவரம்
தமிழக அரசின் 'இருசக்கர வாகன திட்டம்': விண்ணப்பிக்க தகுதியுள்ள பெண்கள் யார்?- முழு விவரம்

பிப்ரவரி 24 முதல் அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும் என அறிவிப்பு!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24ஆம் தேதி முதல், அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பணிபுரியும் மகளிர் மற்றும் திருநங்கைகள் தங்களது பணியிடங்களுக்கு சென்று வரவும் மற்றும் வங்கிகளுக்கு சென்று வர ஏதுவாகவும், 125 சிசி கொள்திறனுக்கு மிகாமல் இருக்கும் இருசக்கர வாகனங்களை அவரவர்  விருப்பத்திற்கேற்ப தேர்வு செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளின் உபயோகத்திற்கேற்ப, வடிவமைக்கப்பட்ட மூன்று சக்கர வாகனங்களும் வாங்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், தங்களது சொந்த நிதி அல்லது வங்கிகளின் மூலமாக கடன் பெற்று, இருசக்கர வாகனம் வாங்கிக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்திற்கான விண்ணப்ப விநியோகம், தமிழகம் முழுவதும் இன்று தொடங்கியது. சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள தண்டையார்பேட்டை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் குவிந்த ஏராளமான பெண்கள் தங்களது அடையாள அட்டையை காண்பித்து விண்ணப்ப படிவங்களை ஆர்வமுடன் பெற்றுச் சென்றனர்.

Check our All Movie/ Actors comedians Meme Templates from here Please Support us by like/Follow our pages: Facebook | Twitter | Instagram

Write your Comments