‘பீம்‘ செயலியை பயன்படுத்தி டிக்கெட் எடுக்கும் அதிர்ஷ்டசாலிகள் 5 பேருக்கு ரெயில் கட்டணம் இலவசம்

33

மத்திய அரசின் ‘பீம்’ செயலியை பயன்படுத்தி ரெயில் டிக்கெட் எடுப்போரின் எண்ணிக்கையை அதிகரிக்க ரெயில்வே இலாகா முடிவு செய்துள்ளது. அதன்படி இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழக இணையதளத்தின் வழியாக ‘பீம்‘ செயலி மற்றும் ஒன்றிணைந்த பணப்பட்டுவாடா முறை (யு.பி.ஐ.) ஆகியவற்றின் மூலம் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு மாதந்தோறும் கம்ப்யூட்டர் மூலம் பரிசு குலுக்கல் நடத்தப்படும்.

இதில் 5 அதிர்ஷ்டசாலிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் முன்பதிவு செய்த டிக்கெட்டுக்கான கட்டணம் முழுமையாக திருப்பி அளிக்கப்படும். அதனால் அந்த பயணிகள் 5 பேரும் இலவச பயணம் மேற்கொண்டதாக கருதப்படும்.

இந்த திட்டத்தை கடந்த மாதம் (நவம்பர்) முதல் இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் அறிமுகம் செய்துள்ளது. அடுத்த 6 மாதங்களுக்கு இந்த திட்டம் நடைமுறையில் இருக்கும். முதல் 5 அதிர்ஷ்டசாலிகள் விரைவில் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்படுவார்கள். டிக்கெட் எடுத்துவிட்டு பயணத்தை ரத்து செய்தவர்கள் இந்த குலுக்கலில் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

 Check our All Movie/ Actors comedians Meme Templates from here Please Support us by like/Follow our pages: Facebook | Twitter | Instagram

Write your Comments