பெண்கள் கட்டாயம் தெரிந்துக்கொள்ள வேண்டிய ஒன்று… மறக்காமல் படியுங்கள்

365
பெண்கள் கட்டாயம் தெரிந்துக்கொள்ள வேண்டிய ஒன்று… மறக்காமல் படியுங்கள்
பெண்கள் கட்டாயம் தெரிந்துக்கொள்ள வேண்டிய ஒன்று… மறக்காமல் படியுங்கள்

பெண்கள் கட்டாயம் தெரிந்துக்கொள்ள வேண்டிய ஒன்று… மறக்காமல் படியுங்கள்

இன்றைய கால கட்டத்தில் அதிக பெண்கள் மாதவிடாய் காலங்களில் நாப்கின்களை உபயோகிக்கின்றனர். இதனால் சவுகரியமாகவும், பயன்படுத்துவதும் மிக எளிது மற்றும் பாதுகாப்பானது என்று எண்ணியே இதனை உபயோகிக்கின்றனர்.

பாதிப்பு

எனினும் இந்த அல்ட்ரா நாப்கின்களில் ஒருவகையான கெமிக்கல் பயன்படுத்தி தயாரிக்கின்றனர். அந்த கெமிக்கல் பெண்களுக்கு வெளிப்படும் திரவத்தை ஜெல் நிலைக்கு மாற்றுகிறது. இதனால் பெண்களுக்கு சில வகையான கேடுகள் விளைகிறது.

நாப்கின்களை பயன்படுத்துபவர்களுக்கு சிறுநீர்ப்பை மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் உருவாக செய்கிறது. அதிக நேரம் ஒரே நாப்கினை வைத்துக்கொண்டால் இரத்தம் பச்சை நிறமாக மாறுவதுடன் பாக்ட்ரியா தொழிற்பாடு அந்த ஜெல்லில் ஏற்பட்டு உடலுக்கு உள்ளே செல்கிறது.

நாப்கின்ஸை தவிற டாம்பான்ஸ், மாதவிடாய் கப்கள் இது பற்றி பலருக்கும் தெரியாமல் இருக்கிறது.

மாதவிடாய் கப்கள்
பயன்படுத்தும் முறை

இந்த மாதவிடாய் கப்பினை முதலில் ஒரு C வடிவம் வருமாறு மடித்துக்கொள்ள வேண்டும், பின்னர் இதனை பெண்ணுறுப்பில் செருகிவிட வேண்டும். இதன் மடிப்பு உள்ளே சென்ற பிறகு தானகவே விரிந்து பழைய நிலைக்கு வந்துவிடும். உள்ளே வைத்தவுடன் ஒருமுறை திருப்பி விட்டுக்கொள்ளவும். இதனால் ஒருவேலை அந்த கப் விரிவடையாமல் இருந்தால் விரிவடையும்.

முதலில் இந்த மாதவிடாய் கப்களை பயன்படுத்தும் போது ஒரு சிலருக்கு சிரமமாக இருக்கலாம். ஆனால் இது சீக்கிரமே பயன்படுத்துவதற்கு எளிதாக இருக்கும்.

முதல் முறையாக பயன்படுத்தும் போது சிலருக்கு இது வலியை ஏற்படுத்தலாம். இதனை வெளியே எடுக்கும் போது நீங்கள் வலியை உணரலாம். ஆனால் இது அனைவருக்கும் வலியை உண்டாக்காது. இந்த வலியை குறைக்க நீங்கள் இயற்கையான வலி நிவாரணிகளை பயன்படுத்தலாம்.

டாம்பான்ஸ்

டாம்பான்ஸ் என்பது பிறப்புறுப்புக்குள் வைப்பது.

உள்ளிருந்து உதிரத்தை உறிந்து கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்டது. இந்த டாம்பான்ஸ் கருப்பையின் அருகிலே இருப்பதால் சரியான கால இடைவெளியில் மாற்றவில்லை என்றால் அதாவது 6 மணி நேரத்துக்கு அதிகமாக வைத்திருந்தோமானால் எளிதில் நோய்த்தொற்று ஏற்படும். இந்த தொற்று நோய் கிருமி டாக்ஸிக் ஷாக் சிண்ட்ரோம் என்னும் நோய் தாக்குதலை ஏற்படுத்துகிறது.

Check our All Movie/ Actors comedians Meme Templates from here Please Support us by like/Follow our pages: Facebook | Twitter | Instagram

Write your Comments